வேலையில்லாத பணக்காரர் இவர் தான்...

பிரபல FC Barcelona கால்பந்து அணியுடனான லயோனல் மெஸ்ஸியின் ஒப்பந்தம் நேற்று முந்தினம் (ஜூன் 30) இரவு 12 மணியுடன் முடிவடைந்தது.

இதனை அடுத்து மீண்டும் மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் பார்சிலோனா அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான Manchester City அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெஸ்ஸி தனது 13 வயதில் முதன்முதலாக பார்சிலோனா கிளப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். தற்போது 34 வயதாகும் நிலையில் இதுவரை பார்சிலோனா கிளப்புக்காக மட்டுமே அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

16வது வயதில் முதன்முதலாக பார்சிலோனா அணிக்காக களம் கண்ட மெஸ்ஸி,  2005-ம் ஆண்டு மே1 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் கிளப் அணிக்காக இளம் வயதில் கோல் அடித்த முதல்வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி தனதாக்கினார்.

கடந்த 22 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, இதுவரை 34 க்கும் அதிகமான கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவரையிலான தனது ஒட்டுமொத்த கால்பந்து பயணத்தில் 750 க்கும் அதிகமான கோல்களை இவர் அடித்துள்ளார். மேலும் ஒரு கிளப் அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் இன்றுவரை இவரே கொண்டுள்ளார்.