Mexico arrests 228 refugee

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக  மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து வரும் நிலையில் 228 அகதிகளை மெக்சிகோ அரசு கைது செய்துள்ளது.

மெக்சிகோ வழியாக அகதிகள் பல பேர் அமெரிக்காவில் நுழைவது அடிக்கடி நிகழும் சம்பவமாகும். கடந்த வாரம் மெக்சிகோவிலுள்ள ஆற்றின் வழியாக சட்ட விரோதமாக நுழைந்த போது தந்தை மற்றும் இரண்டு வயது மகள் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்கா நுழைவதை தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுத்தார்.

அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மெக்சிகோ-அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சட்ட விரோத செயலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ அரசு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் சரக்கு லாரி ஒன்றை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை மெக்சிகோ கைது செய்தது. இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கவுதமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.