ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ராம் ஆகியோரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசவுள்ளார்.
ஜப்பானிலுள்ள ஒஸாகா நகரில் ஜி 20 அமைப்பு நாடுகளின் 14 - வது உச்சி மாநாடு வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ராம் ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து இரு நாடுகளின் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளார். இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்று இந்திய பிரதமரான நரேந்திர மோடி பதவியேற்புக்கு பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை முதல் முறையாக சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - இந்தியா - சீனா நாடுகளை கொண்ட ரிக் அமைப்பின் மாநாடு, அமெரிக்கா - ஜப்பான் - இந்தியா நாடுகளைக் கொண்ட ஜேஏஐ அமைப்பின் மாநாடு ஆகிய இரண்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.