என் கதை இன்னும் முடிந்து விடவில்லை- ரோஜர் பெடரர்

2020 ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் செமிபைனலில் செர்பிய நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு டென்னிஸ் பக்கம் பெடரர் தலை காட்டவில்லை. 20 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களுடன் ரஃபேல் நடாலுடன் சமனிலை வகிக்கிறார் பெடரர்.

முழங்காலில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதால் 13 மாதங்கள் டென்னிஸை ரோஜர் பெடரரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 39 வயதாகும் இந்த டென்னிஸ் நட்சத்திரம் தன் கதை இன்னும் முடிவடையவில்லை, விம்பிள்டனில் முழு உடல் தகுதியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்த வாரம் நடைபெறும் கத்தார் ஓபனில் பெடரர் ஆடுவார் என்று பரவலான எதிர்பார்க்கப்படுகிறது.

தனது உடல்நலம் குறித்து தெரிவிக்கும் போது, “கடந்த சில மாதங்களாக சிறிய போட்டிகளில்தான் ஆடிவருகிறேன். நான் மீண்டும் நல்ல பயிற்சி எடுக்க வேண்டியுள்ளது. வலுவாகவும் உடல் தகுதியுடனும் இன்னும் வேகமாக நகர்தலும் அடங்கிய ஒரு முழுமையான நிலை எய்த வேண்டும் என்று கருதுகிறேன்.
இதை கணக்கிட்டு பார்த்தால் விம்பிள்டனுக்கு நான் 100% உடல் தகுதியுடன் வருவேன். அப்போது முதல்தான் எனக்கு சீசன் தொடங்குகிறது. அதுவரை எல்லாமே “எப்படிப் போகிறது என்று பார்ப்போம்” என்கிறார்.