உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வர என் மனைவி மறுத்துவிட்டார் – கம்பீர்

கடந்த 2011-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது மனைவி நடாஷா வர மறுத்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அது என்ன அவ்வளவு முக்கியமா? இது கிரிக்கெட்டின் மற்றொரு விளையாட்டு போட்டி அவ்வளவுதானே என்று இறுதி போட்டியைக் காண அழைத்த போது தனது மனைவி நடாஷா இவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற உலக்கோப்பை இறுதி போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.