உலகளவில் அதிக பயனர்களைக் கொண்டதாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இருந்து வருகிறது. தனித்துவமான கன்டென்டுகளை பயனர்களுக்கு வழங்குவதில், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நிகர் அதுதான் என்றே சொல்லலாம். புதிய திரைப்படங்கள் பலவும் இந்த தளத்திலேயே வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில் கொரோனா காலகட்டத்தில் நிறுவனம் அதிக வளர்ச்சியை கண்டிருந்தது. இதற்கு காரணம் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு பொழுதுபோக்கு அதிகமாக தேவைப்பட்டது தான். இந்த நேரத்தில் நிறுவனம் அதீத வளர்ச்சியைக் கண்டிருந்தது.
இந்நிலையில் அந்நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பயனர்கள் அதிகம் இருந்த போதும் வருவாயில் முன்னேற்றம் காணாததால், நிறுவனம் அதுகுறித்து ஆய்வு நடத்தியது. அப்போது தான், பயனர்கள் கடவுச்சொல்லை பிறருடன் பகிர்வதால் ஏற்படும் இழப்பை நிறுவனம் உணர்ந்தது.
பயனர்கள் தங்களின் பாஸ்வோர்டை பிறருக்கு பகிர்ந்து உதவ முடியாத படி பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பயனார்களில் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.
வரும் நாள்களில் இதனை சரிசெய்ய மைரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
"பெரும்பாலான குடும்பங்கள் கணக்குகளைப் பகிர்ந்துகொள்வதையும்" "போட்டியையும்" நிறுவனம் தவறு செய்கிறது. சமீபத்தில், Netflix கணக்குப் பகிர்வைப் பணமாக்குவதற்கான வழியை நெட்பிளிக்ஸ் சோதிக்கத் தொடங்கியது. இப்போது, நிறுவனம் அதன் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் நெட்பிளிக்ஸ் கணக்கு இல்லாமல், சேவையை இலவசமாக அனுபவித்து வருவதாக நிறுவனம் கூறுகிறது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என கணக்கை பகிர்வதால், நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
மந்தமான வளர்ச்சி மற்றும் உலகளவில் பயனர் எண்ணிக்கை குறைந்து வருவதால், நெட்பிளிக்ஸ் தனது டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் விளம்பரங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வேகமாக செயல்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், Netflix அதன் உள்ளடக்கங்களில் விளம்பரங்களையும் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.