வாழைப்பழ சர்ச்சையில் மாட்டிய டென்னிஸ் வீரர்

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான் ஆஸ்திரேலிய ஓபன் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடிய பிரான்ஸைச் சேர்ந்த வீரர் ஒருவர் தான் வாழைப்பழத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

டென்னிஸ் அரங்கத்தில் விளையாட்டின் போது டென்னிஸ் பந்துகளை எடுக்க சிறுவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள் பெரும்பாலும் இவர்கள் டென்னிஸ் பயிற்சி பெறும் சிறுவர்களாகவே இருப்பார்கள்.

இந்நிலையில் போட்டியின் நடுவே ஓய்வில் அமர்ந்திருந்த டென்னிஸ் வீரர் எலியட் பெஞ்சரிட் தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை உரித்துத் தரும்படி பந்துகளை எடுக்கும் சிறுமியிடம் கேட்டுள்ளார். பழத்தை அந்தச் சிறுமியும் வாங்க, இதனைக் கண்ட நடுவர் ஜான் ப்ளூம் உடனடியாக பழத்தை வீரரிடமே திரும்ப அளிக்கும்படி கூறி விட்டார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் வீரரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.