திமுகவின் ஓராண்டு ஆட்சி... ஈபிஎஸ் விமர்சனம்

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்யான விளம்பரம் என்றும் அதிமுகவின் திட்டங்களை தான் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் எனவும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கூறியதாவது:

“திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒரு பொய்யான விளம்பரத்தை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சி அமைத்த இந்த ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்க முழுமையாக கெட்டு விட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற நிலையில் அந்த முடிவுற்ற பணியைத்தான் முதல்வர் இன்று திறப்பு விழாவாக காண்கிறார்.மேலும்,அம்மா அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு தான் முதல்வர் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஓராண்டுகால திமுக ஆட்சியில் எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை,நடைமுறைபடுத்தப்படவில்லை.ஆனால்,அம்மா ஆட்சியில் இருந்த போதும்,மறைந்த போதும் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.இதனால் அதிக அளவில் மக்களும் பயன் பெற்றார்கள்”,என்றார்.