Pakistan Military return back

கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்தியன் சிஆர்பிஎப் வீரர்கள் 40  பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய  விமானப்படை, இன்று பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியது.

தகவலின் படி, அதிகாலை 3:30 மணியளவில் 2000 விமானப்படை வீரர்கள் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் முகாம் மீது குண்டு வீசி முழுவதுமாக தகர்த்து. மேலும் ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பின் 3 முகாம்களை அழித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை வீரர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக புகார் கூறியது. இந்திய விமானப்படை எல்லை மீறியதை அறிந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை நோக்கி வந்தது. இந்திய விமானப்படையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.