Political leaders salutes IAF

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் தீவிரவாதி முகாமின் மீது தாக்குதல்  நடத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விமானப்படையின் இந்த தாக்குதல் குறித்து கூறுகையில், 'இந்திய விமானப்படையின் இந்த தாக்குதலுக்கு வாழ்த்துக்கள்' என வீரர்களை கவுரவப்படுத்தி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் 'இந்தியர்களை பாதுகாக்க வேண்டி செயல்புரிந்த இந்திய விமானப்படை வீரர்களின் உறுதிக்கும், ஆற்றலுக்கும் எங்களது வாழ்த்துக்கள்.ஜெய் ஹிந்த் ' என்று பதிவிட்டுள்ளனர்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலும் இந்தியாவின் பதிலடியை வரவேற்றுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ' இந்திய விமானப்படை வீரர்களின் வீரத்தையும், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக  நடந்த இந்த தாக்குதலுக்கும் தலை வணங்குகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார். பல அரசியல் தலைவர்கள் விமானப்படை வீர்ரகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.