கொரோனா எதிரொலி : பிரஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா எதிரொலியால், பிரஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டிகள் 3 மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டிகள் வரும் மே 24 யில் தொடங்கி ஜூன் 7ம் தேதி வரை இத்தொடர் முதலில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், போட்டிகளை செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் தங்களால் போட்டிகான ஏற்பாடுகளை சரிவர செய்ய முடியவில்லை என்றும், அதனால், நிர்ணியிக்கப்பட்ட தேதிகளில் தங்களால் போட்டிகளை நடத்த் முடியவில்லை என்றும் பிரஞ்சு டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.