உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் இந்தியவின் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
சீனாவின் குவாங்ஜோவ் நகரில், சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடித்த வீராங்கனைகள் மட்டும் பங்கேற்று விளையாடும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் ஜப்பான் நாட்டின் அகானே யமா குச்சியுடன் மோதினார். சுமார் 68 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சிந்து 21-18, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்க்கு பிறகு தோல்வியைத் தழுவியுள்ளார்.