Retirement plans of Roger Federer

தென் அமெரிக்காவில் நடைபெற்று வரும் தனது டென்னிஸ் போட்டிகளின் கண்காட்சியில் பங்கேற்று வருகிறார் 38 வயதான ரோஜர் ஃபெடரர்.

அப்போது அவரிடம் ஓய்வு பெறும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஃபெடரர், தனது 28வது வயதில் இப்படி கேள்வி எழுப்பப்பட்டது எனவும் ஆனால் 10 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை விளையாடும் உடல்நலத்தில் தான் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உடல், விளையாடுவதற்கு ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். தான் 36 வயதிற்கு மேல் விளையாட முடியாது என நினைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

டென்னிஸ் உலக தரவரிசை பட்டியலில் ரோஜர் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.