800-வது கோல் அடித்தார் கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் ரொனால்டோ..!!

கால்பந்து உலகில் தலயா, தளபதியா என மெஸ்ஸி, ரெனால்டோ ரசிகர்களிடையே அடிக்கடி மோதல் வரும்.

தற்போது மெஸ்ஸி 7வது முறையாக தங்க கால்பந்து கோப்பையை வென்று, ரொனால்டோவை (5) பின்னுக்கு தள்ளினார்.

இந்நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடட் அணியும், ஆர்செனல் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடிக்க, 800வது கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். அத்துடன் நிற்காமல் 70வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி 801வது கோல் அடித்தார். இதன் மூலம் ஃபிஃபா அங்கீகரித்த கால்பந்து தொடரில் 801 கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய அத்தியாத்தினை  ரொனால்டோ படைத்தார்.

ரொனால்டோவின் அதிரடியால் மான்செஸ்டர் யுனைடட் அணி 3க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 37வயதான ரொனால்டோ முதலிடத்தில் இருக்க, மெஸ்ஸி 2வது இடத்தில் உள்ளார்.

ரொனால்டோ இன்னும் 2 ஆண்டுகள் விளையாடினால் ஆயிரம் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.