சாய்னா நெக்வால் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்தியாவின் பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேக்வால் இன்று தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சாய்னா தான் இந்தியாவின் சார்பில் பேட் மிண்டன் பிரிவில் ஒலிம்பிக்கில் முதன் முறையாக பதக்கம் வென்றவர் ஆவார்.

இவர் கடந்த 2015ம் ஆண்டில் உலகின் நெ.1 பேட் மிண்டன் ப்ளேயர் என்ற பெருமையினையும் பெற்றார். 

இவரது வாழ்க்கை வரலாறு சாய்னா எனும் பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. அமோல் குப்தே இத்திரைப்படத்தினை இயக்குகிறார். பாலிவுட் நடிகையான பரினிதி சோப்ரா இத்திரைப்படத்தில் சாய்னாவாக உருமாறியுள்ளார்.

சாய்னாவின் கதாபாத்திரத்திற்காக பரினிதி ஏகப்பட்ட விளையாட்டு பயிற்சிகளைப் பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.