ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் தமிழக வீரர் சத்திய ஞான சேகரன்!!

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று அதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்திய ஞான சேகரன் தகுதி பெற்றுள்ளார்.

தமிழக வீரர் சத்திய ஞான சேகரன் முறையே பாகிஸ்தான் வீரர் முகமது ரமேசை 4க்கு 0என்ற செட் கணக்கிலும் மற்றொரு ஆட்டத்தில் சக தமிழக வீரர் சரத் கமலை 4க்கு 3 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

தோஹாவில் நடந்த போட்டியின் ரவுண்ட் ராபின் சுற்றில் பாகிஸ்தான் வீரர் முகமது அலியை எதிர்கொண்ட சரத் கமல் நான்கிற்கு ஜீரோ என்ற செட் கணக்கில் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.