கடுமையாக உயர்ந்த விலைவாசி… எதிர்க்கட்சிகள் அமளி.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு.!

விலைவாசி உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம் 2 மணி வரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3வது நாளாக இன்றும், எதிர்காட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு, பணவீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து 3வது நாளாக அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆதலால், இன்று நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2 மணிக்கு மேல் மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.