கடன் பிரச்சனை தீர சித்திரை அமாவாசையில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!!

சித்திரை அமாவாசை அன்று உங்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து வர கடன் பிரச்சனை தீரும்.

இன்று இந்த வருடத்தின் முதல் அமாவாசை திதியான சித்திரை அமாவாசை திதி ஆகும். இன்று நீங்கள் எப்போதும் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பீர்களோ அதேபோல் திதி தர்பணங்களை கொடுத்து விட வேண்டும். இன்று குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறந்தது. உங்களின் கடன் தீர இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆகும். இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய மஞ்சள் நிற துணியும் சிறிது கல் உப்பும் தேவைப்படும்.பூஜை அறையில் அமர்ந்து கொண்டு முதலில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறி உங்கள் கடன் தீர வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கையில் இருக்கும் கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். பிறகு ஒரு பிரியாணி இலையில் உங்கள் கடன் தொகையை எழுதி அந்த கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள். இதனையும் அந்த மஞ்சள் துணியில் வைத்து, இதனுடன் ஒரு துண்டு வசம்பை வைத்து துணியை முடிச்சிட்டு உருண்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மஞ்சள் துணியை வீட்டின் நிலைவாசல் முகப்பில் கட்டி விடுங்கள். அடுத்த அமாவாசை அன்று இதில் இருக்கும் உப்பை மட்டும் எடுத்து தண்ணீரில் கரைக்க வேண்டும்.அப்படி கரைக்கும் போது உங்கள் கடன் கரைய வேண்டும் என்று நினைக்க வேண்டும். பின்னர் புதிய ஒரு கைப்பிடி கல்லுப்பை அந்த மஞ்சள் துணியில் வைத்து ஏற்கனவே இருந்த பிரியாணி இலை, வசம்புடன் கட்டி விடுங்கள். இதேபோன்று மாதம் மாதம் வரும் அமாவாசையில் செய்து வர வேண்டும். உங்கள் கடன் கரைந்து வருவதை நீங்கள் உணர்வீர்கள். கடும் உழைப்புடன் நம்பிக்கையும் சேர்த்து இந்த பரிகாரத்தினை செய்து வாருங்கள், உங்கள் கடன் பிரச்சனை தீரும். உங்களுக்கு நகை கடன் இருந்தால் பிரியாணி இலையில் நகைக்கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள்.