ஆற்காட் இளவரசர் நவாப் மொஹம்மது அப்துல் அலி, புல்வாமாவில் கடந்த பதினான்காம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனித இனத்திற்கு இழைக்கப்பட்ட பெருங்குற்றம் என்று கூறியுள்ளார்.
"ஒருவனோ அல்லது குழுவோ ஆக்ரமிப்பு, அதிகாரத்தின் மூலம் இந்த உலகத்தை ஆள முற்படுமாயின் அது ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. மக்களைக் கொலை செய்யும் செயல் என்பது வீரத்தை குறிக்காமல் ஒருவனுடைய கோழை தனத்தையே காட்டுகிறது. குடிமகனாய் ஒவ்வொரு இந்தியனும் இம்மாதிரியான தாக்குதல்களுக்கு கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். காஷ்மீரிலுள்ள இளைஞர்கள் நன்றாக மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகள் ஆக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் முஸ்லீம் அல்லாத மதத்தை சார்ந்தவர்களே. இளைஞரின் இந்த செயல்களிலிருந்து வெளியே கொண்டு வர செய்வது மத தலைவர்களின் கடமையாகும்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும் 'தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். மற்றும் காயமடைந்தவர்களும் வேகமாக குணமடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்' என்றார்.