தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலா – ஜூன் 4-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!

சென்னையில் முதன்முறையாக கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

கடந்த மாதம் 17ஆம் தேதி தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் இருந்து ஜூன் மாதம் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் முதன்முறையாக கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.