ஆசிய கண்டத்திலேயே முதல் நபர்.... சாதனை படைத்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் களத்தில் சாதனைகளை படைப்பதில் வல்லவர். அவர் களம் காண்கின்ற ஒவ்வொரு போட்டியையும் சாதனைகளாக மாற்றுபவர் அவர். இந்நிலையில் ஆசிய கண்டத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 150 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட்.

அதோடு கிரிக்கெட் விளையாட்டில் அதிக இன்ஸ்டா ஃபாலோயர்களை பெற்றவரும் கோலி தான் என்ற மைல் கல்லையும் அவர் எட்டியுள்ளார். மேலும் உலக அளவில் 150 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ள நான்காவது விளையாட்டு வீரராகவும் உள்ளார்.

விரைவில் இந்த பட்டியலில் கோலி முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. முதல் மூன்று இடத்தில் ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் நெய்மர் என கால்பந்து வீரர்கள் உள்ளனர்.