வித்தியாச விரும்பிகள் சூழ் உலகு... உடலில் தீவைத்து மணம் முடித்த ஹாலிவுட் ஸ்டண்ட் ஜோடி

ஹாலிவுட் ஸ்டன்ட் ஜோடியின் சாகச திருமணம் முடித்திருக்கிறது. அப்படி என்ன சாகசம் பார்க்கலாம்.

ஹாலிவுட்டில் ஸ்டன்ட் கலைஞர்களாக பணியாற்றி வரும் காதல் ஜோடி ஒன்று உடலில் தீ வைத்து திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேப் ஜெசோப் , ஆம்பிர் பாம்பிர் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதனையடுத்து தேவாலயத்தில் திருமணத்தை முடித்து வெளியே வந்த இருவரும், உடல் மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னால் சாகசம் செய்து காட்டினர். உரிய பாதுகாப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே போல், தீ வைக்கும் நிகழ்வு மிகவும் பயிற்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.