செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்கவிழா நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.
இந்த விழாவின்போது, நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ரஜினிகாந்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மருது, காவலர்கள் ராஜ்குமார், தங்கப்பாண்டி உள்ளிட்ட தனக்கு பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரை ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு அழைத்து நன்றி கூறி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.