இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக்காலமாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 22 பைசா குறைந்து 79.48 அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் சூழலில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

எனினும், கச்சா எண்ணெய் விலையும் இன்று குறைந்துள்ளது. சீனாவில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை இன்று பயங்கரமாக சரிந்துள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் இந்திய ரூபாய் மேலும் சரியாமல் தடுக்கப்பட்டுவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 102.33 டாலர் அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.