இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

உள்ளூர் வரிகள், VAT (மதிப்புக் கூட்டப்பட்ட வரி), சரக்குக் கட்டணம் போன்ற காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

இந்நிலையில், சென்னையில் இன்று 29-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து 29 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர்  மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.