ரஷ்ய ராணுவத்திடமிருந்து பெரிய நகரங்களை மீட்டு முன்னேறி வரும் உக்ரைன்!!

உக்ரைனில் நீண்டகால போருக்கு ரஷிய அதிபர் புதின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில், அந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷியா ராணுவம் முயற்சிக்கிறது, கிழக்கில் வெற்றி பெற்றாலும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரித்துள்ளார்.

போரினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் பல்வேறு இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவை அந்நாட்டு ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே, மரியுபோல் நகரத்தை உக்ரைன் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.