அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி போட்டி; ஜப்பானின் நவோமி ஒசாகாவும், பெலாரசின் விக்டோரியா அசரெங்காவும் மோதுகின்றனர்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், பெலாரசின் விக்டோரியா அசரெங்காவும் மோதவிருக்கின்றனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை எதிர்கொண்டு விளையாடினார். இந்த ஆட்டத்தில் ஏழுக்கு ஆறு, மூன்றுக்கு ஆறு, ஆறுக்கு மூன்று என்கிற செட் கணக்கில் வெற்றிபெற்ற நவோமி ஒசாகா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்கா வெற்றிபெற்றார். 

இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா - விக்டோரியா அசரெங்கா இருவரும் மோத உள்ளனர்.