Vijay Sethupathi is going to enter politics

மாதந்தோறும் தன் ரசிகர்களுக்கு திரையில் விருந்து கொடுத்து எப்போதும் பிஸியாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.அவர் தற்போது தமிழில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் மற்றும் மலையாளம்,தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி,திரிஷா நடித்து வெளிவந்த '96' படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.'துக்ளக்' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் டில்லி பிரசாத் இயக்குகிறார்.நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,சீதக்காதி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.இது ஒரு முழு நீள அரசியல் படம் எனவும்,விஜய் சேதுபதி இதில் அரசியல்வாதியாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி.இந்நிலையில் அரசியலை மையப்படுத்தி அவர் நடிக்கவுள்ள துக்ளக் படத்தின் அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.