சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய விஜய் சேதுபதி

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் இந்திய அளவில் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஜய் சேதுபதியிடம் தான் முதலில் கேட்டார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அதற்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 35 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க வாங்கும் சம்பளத்தை விட இது அதிகமாகும். ஒரு வில்லனுக்கு இத்தனை கோடி சம்பளமா என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் விஜய் சேதுபதி. அதில் இருந்தே அவரை தங்களின் படங்களில் வில்லனாக நடிக்க வைக்க இயக்குநர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள்.

இப்படியே போனால் விஜய் சேதுபதியை இனி வில்லனாகத் தான் பார்க்க முடியும் போல இருக்கிறது. எந்த கதாபாத்திரமும் குறைவானது இல்லை என்று நினைக்கும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க கூடுதல் தொகையை கேட்கிறாராம்.

நீங்கள் எவ்வளவு கேட்டாலும் தருகிறோம் சார், வில்லத்தனத்தில் மிரட்டுங்க என்று கூறி அவரையே அதிர வைக்கிறார்களாம் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்.

இதற்கிடையே விஜய் சேதுபதி ஒரு படத்தில் வில்லனாக நடித்தால் ஹீரோவை விடஇவரை பற்றி பேச செய்துவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.