உலக அளவில் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான வெய் ரூனி, இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர். 2003 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 120 போட்டிகளில் விளையாடி 53 கோல்கள் அடித்துள்ளார்.
33 வயதாகும் வெய்ன் ரூனி முதல் முறையாக எந்வர்டன் என்ற கிளப் அணிக்காக விளையாடியவர், பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக சுமார் 13 வருடங்கள் விளையாடினார். இதில் அவர், 393 போட்டிகளில் விளையாடி 183 கோல்கள் அடித்திர்க்கிறார்.
அதன்பிறகு, மீண்டும் எவர்டனுக்கு திரும்பியவர், பிறகு அமெரிக்காவின் டி.சி யுனைடெட் அணியில் விளையாடி வந்தார். இந்த நிலையில், மீண்டும் இங்கிலாந்து கிளப் அணியான ரெர்பி கவுண்டி அணியில் விளையாட ஒப்பந்தமாகியிருக்கும் வெய்ன் ரூனி, 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அந்த அணியின் வீரராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிய உள்ளார்.