13 Years of BB Varalaru

எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் முன்னணி நடிகர்கள் படமென்றால் சொல்லவா வேண்டும். தல அஜித் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வரலாறு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 13 வருடங்கள் கழித்தாலும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் நீங்கதா இடம் பிடித்துள்ளது.

ரசிகர்கள் இதனை கொண்டாடும் விதமாக #13YearsofBBVaralaru என்ற ஹாஷ் டேக் மூலம் இந்தியளவில் கொண்டாடி வருகின்றனர். இதே தீபாவளியன்று கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியானது. ஆனால் வரலாறு மட்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நயன்தாரா நடித்த மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியானது. அவை ஈ, தலைமகன், வல்லவன் என மூன்று படங்களுமே அதே தீபாவளிக்கு வெளிவந்தது, அதில் ஈ படம் மட்டுமே சுமாரான வெற்றி பெற்றது. அஜித் படம் வந்தாலும், நயன்தாராவின் மூன்று படங்கள் வெளிவந்தது ஒரு ஆச்சர்யமான விஷயம் தான்.

அஜித் நடித்த வரலாறு திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அஜித் நடித்த படங்களில் முதல்முறையாக 50 கோடியை கடந்த முதல் படமென்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக சிறந்த நடிகர் பிலிம்பேர் விருதும் அஜித்திற்கு வழங்கப்பட்டது. மேலும் ஒரு சூப்பரான செய்தி என்னவென்றால், வழக்கமாக ரசிகர்கள் ஒரு படத்திலுள்ள பாடல்களை திரும்ப போட சொல்லித்தானே கேள்விப்பட்டு இருப்போம் . ஆனால் வரலாறு திரைப்படத்திற்கு சென்னை காசி திரையரங்கில் அஜித் வரும் பிளாஷ்பேக் காட்சிகளை திரும்ப போட சொல்லி ஒரு புது வித ட்ரெண்டிங்கை ரசிகர்கள் உருவாக்கினர்.


https://www.youtube.com/watch?v=cSO7W0MHfo4&t=111s

Varalaru, Ajith, KS Ravikumar, AR Rahman. Asin, Kaniga, Godfather