28 years of Vijayism திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி

தமிழ் சினிமாவின் தளபதி, பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி, டிஆர்பி கிங் என தென்னிந்திய சினிமாவின் தங்க தளபதி விஜய், தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் சரியாக 28 ஆண்டுகள் ஆகிறது.

தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான விஜய்க்கு முதல் திரைப்படத்தில் எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. அவரை பத்திரிக்கைகள் கிண்டல் செய்தன. தளபதி தனது முதல் வெற்றிக்காக பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

விஜய் நான்கு ஆண்டுகள் கழித்து பல்வேறு தோல்விகளுக்கு பிறகு பூவே உனக்காக திரைப்படத்தின் மூலமாக தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
தொடர் தோல்விகளுக்கு பிறகு திருமலை திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்த விஜய், கில்லி திரைப்படத்தில் தமிழகத்தில் அதிக திரையரங்க வசூல் ஈட்டிய நாயகன் என்ற புதிய சாதனையை படைத்து தமிழ் சினிமாவின் மிக முக்கிய தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார். தொடர்ந்து துப்பாக்கி கத்தி ஆகிய திரைப்படங்களில் சமூகக் கருத்துக்களையும் பேசத் தொடங்கிய விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக தன்னை மெருகேற்றிக் கொண்டார்.  தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகராகவும் தளபதி விஜய் உயர்ந்தார்.

பிகில் திரைப்படத்தின் மூலம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து வருகிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள விஜய் அறிமுகமான 28 ஆண்டுகளில் இதுவரை 64 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் 64-வது திரைப்படமாகும். இந்த ஒரு திரைப்படத்திற்காக தான் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.

Thalapathy, Thalapathy Vijay, Master, Vijayism, Master, Lokesh Kanagaraj