A special article for 'Chiyaan' Vikram's Birthday

தமிழ் சினிமா நடிகர்கள் தங்களுக்கென ரசிகர்களை உருவாக்குவதை விட தன்னை வெறுக்கும் மக்கள் இல்லாமல் நடிகனாய் வளர்வது மிகக் கடினம். தன்னை ரசிக்கும்  ரசிகர்கள் இருப்பதற்கு சமமாக தன்னை வெறுப்பவர்களும் நிச்சயம் இருப்பார்கள். ஒரு படம் தோல்வி கொடுத்தாலோ அல்லது பொது இடங்களில் ஏதேனும்   தவறாக செய்து விட்டாலோ அதை நெட்டிசன்கள் உடனே சமூக வலைத்தளங்களில் கேலி செய்து விடுவார்கள். ஆனால் ஒரு நடிகன், தான் என்ன செய்தாலும் அவரை வெறுக்காமல் அவர் தோல்விகள் பல கொடுத்தாலும் அவனோடு உடன் பயணிக்கும் ரசிகர்கள் இங்கு அதிகம். அது வேறு யாருமில்லை. ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் 'சியான்' என்ற நடிகர் விக்ரம் ஆகும்.

ஆரம்ப காலத்தில் சினிமாக்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் முகம் காட்டிக் கொண்டும், அப்போதைய பிரபல ஹீரோக்களான அப்பாஸ், பிரபுதேவா போன்றவர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டும் இருந்த விக்ரம், இயக்குனர் பாலாவின் சேது படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் முதல் பாதியில்  கல்லூரி மாணவனாக, இரண்டாம் பாதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருவேறு பரிமாணங்களில் அசத்தி இருப்பார் விக்ரம். முதல் படத்திலே சிறப்பான அந்தஸ்து பெற்ற விக்ரம், பின் மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நாயகனாக நடித்தார். அனைத்து ஜானர் படங்களிலும் நடிக்கும் திறமை விக்ரமுக்கு உண்டு. விக்ரமின் சிறப்பம்சம் தன் உடலையும் நடிப்பையும் கதாபாத்திரத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் திறனுடையவர். உதாரணமாக சில வருடங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளிவந்த 'ஐ' திரைப்படத்தில் கூனி போய் உடல் முழுவதும் கொப்பளங்களாக இருக்கும் காதாபாத்திரம் ஒன்றில் நடித்து அசத்தியிருப்பார். படம் பெரிதாக போகவில்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்காக அவர் உடலளவி மிக கடினமாக தன்னை அர்ப்பணித்திருப்பார்.

வெற்றி, தோல்வி என தன் படங்கள் எதை சந்தித்தாலும் அவரது ரசிகர்களும், மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அவரை கேலி செய்வேதோ, அசிங்கமாக பேசுவதோ இல்லை. நடிகன் என்ற வார்த்தைக்கு மிக சரியான உதாரணமாக வாழும் 'சியான்' விக்ரமின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது எங்களது தண்டோரா டைம்ஸ்.

Chiyaan Vikram,Sethu,I,Bala,Happy Birthday Vikram