Are u going to vote for DMK ? then its must read

 திமுக கட்சி தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து போராட்டங்களிலும் தங்களை முன்னிறுத்தி நடத்தி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வு, நியூட்ரினோ திட்டம் என அனைத்திலும் திமுக தமிழக அரசை எதிர்த்து குரல் கொடுத்தது. ஆனால் நிலைமையே வேறு. தாங்கள் தொடங்கி வைத்த, அல்லது ஆதரவாக இருந்த திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது தான் மிக பெரிய வேடிக்கை. ஆம். தமிழக மக்களின் உரிமையை தங்களது பதவி ஆசைக்கும், வாரிசு அரசியல் செய்யவும் காவு கொடுத்த திமுகவின் வரலாற்று பக்கங்கள் இதோ :

* 1970 களில் ஹேமாவதி ஆணை கட்ட ஆட்சேபனை இல்லை என்று கூறி தமிழர்களின் உரிமையை பறிக்க முதலில் விதை போட்டது திமுக.

* அதே சமயத்தில் 1970 ல் காங்கிரஸ் கட்சிக்கு பயந்து  காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் காவிரியை இன்று நாம் இழந்து நிக்க காரணமும் திமுக தான்.

* 1976 ல் கச்சத்தீவை காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்த போது திமுக அமைதியாக இருந்து தற்போது கச்சத்தீவை மீட்போம் என்று முழங்கி கொண்டிருக்கிறது.

* 2009 ல் இலங்கைக்கு ராணுவ உதவி செய்து காங்கிரஸ் லட்சக்கணக்கான உயிர்களை கொடுத்த போது அதற்கு துணை நின்று சதி செய்ததும் திமுக.

* 2010 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்ய முடிவெடுத்த போது, அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் மருத்துவ கனவுகளில் மிதந்த தமிழக மாணவர்களின் உயிர் பலிக்கு காரணமாய் இருந்தது திமுக.

* இன்று டெல்டா மாவட்ட விவசாயிகள் வதங்கி கொண்டிருக்கும் மீத்தேன் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு கையெழுத்திட்டு விவசாய நிலத்தை காவு கொடுத்தது திமுக. அதே  ஆண்டு காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்த்து காங்கிரஸ் கட்சி. மாநில உரிமையை பறிகொடுத்து ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமாய் இருந்தது திமுக. மேலும் தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கொடுத்ததும் திமுக தான்.

உங்களது வாக்கை திமுகவிற்கு அளிக்கும் முன் மேல் சொன்ன காரியத்தையும் ஆலோசித்து பார்த்து உங்களது வாக்கை அளியுங்கள்.

MK Stalin,Karunanidhi,Rahul Gandhi,Sonia Gandhi,Corruption,Lok Sabha Elections