வாள் தூக்கி நின்னான் பாரு சண்டை போட எவனும் இல்லை...9மணி நேரத்தில் 10லட்ச பார்வையாளர்களை கடந்தது கர்ணன் படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க பாடல்'
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச் சொல்லுங்க பாடல் நேற்று இரவு 8மணிக்கு வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் அருமையாக இருக்கிறது. தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த 14ம் தேதி வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதி செய்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
நேற்று பாடல் வெளியானதில் இருந்தே பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் இந்த பாடல் பெற்று வருகிறது. பாடல் வீடியோவில் தனுஷ் இல்லாவிட்டாலும் அந்த ஓவியமே கதை சொல்லுது. கண்டா வரச் சொல்லுங்க வித்தியாசமான முயற்சி. எரியும் தீப்பந்தத்தில் ஓவியம் வரைவது என பாடலில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு அவை வெற்றியும் பெற்றிருக்கின்றன.
https://www.youtube.com/watch?v=xqxF-KM-CxI