26 வருடங்களுக்கு முன் சங்கர் இயக்கிய ஜென்டில்மேன் என்ற திரைப்படம் கல்வியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சங்கர் அர்ஜூன் கூட்டணியில் முதல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான வசனம் "வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா நல்லா இருக்குமல்ல" இந்த வசனத்தை இப்போது திரும்பி பார்க்க வைத்துள்ளது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ஹீரோ திரைப்படம்.
இத்திரைப்படத்தின் புகைப்படமொன்றை ஜென்டில் மேன் திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் தத்ரூபமாக ஒரேமாதிரி இருக்கிறது.
ஜென்டில்மேன் திரைப்படத்தில் மருத்துவக்கல்வி கனவை தொலைத்ததால் உயிரை விட்ட தனது நண்பனையும் தனது அம்மாவையும் இழந்த இளைஞனாக பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கும் கல்வியை இழந்த மாணவனாக அர்ஜூன் நிற்பார். அப்போது நம்பியார் அவருக்கு சில ஆலோசனைகளை வழங்குவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதில், "சத்ரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இரு" என்று அர்ஜூனுக்கு ஆலோசனை வழங்குவார். அதுவே படத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அதேபோல சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆலோசனை தரும் அர்ஜூன் ஏழைகளுக்கு கல்வி மறுக்கப்படும் நிலையில் இந்த சமுதாயத்திற்கு "இந்த சிஸ்டத்த மாத்துறதுக்கு ஒரு காமன்மேனா இருந்தா பத்தாது ஒரு ஹீரோ வேணும்" என்கிறார்.
நம்பியாரால் நல்ல பாதைக்கு திருப்பப்பட்டு ஏழை மாணவர்களுக்கு ஹீரோவான அர்ஜூன் “ஹீரோ” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் பாதையை நல்வழிப்படுத்தி சூப்பர் ஹீரோவாக மாற்றுவாரா என்று பொருத்திருந்து ”ஹீரோ” திரைப்படத்தில் பார்க்கலாம்.