கே. பாலசந்தர். ஒட்டு மொத்த இந்திய திரையுலகிலுள்ள முதன்மையான இயக்குனர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இவர் படைத்த திரைப்படங்கள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத படைப்புகள்.
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், காதல், வாழ்க்கை, குடும்பம் என அனைத்தையும் வேறொரு பரிமாணத்தில் படம்பிடித்து மனிதனின் வாழ்க்கைக்கு திரைப்படம் மூலம் வேறொரு அர்த்தம் தேடி தந்தவர். தமிழ் சினிமாவை நாற்பது ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கும் நடிகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரை தமிழ் சினிமாவிற்கு பரிசளித்த பிதாமகன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட அவர் அறிமுகப்படுத்திய பல இந்திய சினிமா நட்சத்திரங்கள் இன்றும் சினிமா துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர்.
அவர் படைத்த படைப்புகளில் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த திரைப்படங்களின் பட்டியல் :
1. நீர்க்குமிழி
2. மேஜர் சந்திரகாந்த்
3. எதிர்நீச்சல்
4. பூவா ? தலையா ?
5. இரு கோடுகள்
6. நூற்றுக்கு நூறு
7. அரங்கேற்றம்
8. அவள் ஒரு தொடர்கதை
9. அபூர்வ ராகங்கள் (சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகம்)
10. மூன்று முடிச்சு
11. அவர்கள்
12. நிழல் நிஜமாகிறது
13. தப்பு தாளங்கள்
14. நினைத்தாலே இனிக்கும்
15. வறுமையின் நிறம் சிவப்பு
16. தில்லு முல்லு
17. தண்ணீர் தண்ணீர்
18. அச்சமில்லை அச்சமில்லை
19. சிந்து பைரவி
20. புன்னகை மன்னன்
21. மனதில் உறுதி வேண்டும்
22. உன்னால் முடியும் தம்பி
23. புது புது அர்த்தங்கள்
24. அழகன்
25. வானமே எல்லை
26. கல்கி
27. பார்த்தாலே பரவசம் (கே. பாலச்சந்தரின் 100 வது படம்)