திமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் அதிமுகவிற்கு சுனில்- கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் முதல்வர்

கொரோனா பரவலுக்கு முன்னதாகவே பிரஷாந்த் கிஷோர் உடன் திமுக கைகோர்த்து தேர்தலுக்கான வியூகங்களை அமைக்கத் தொடங்கிய போதுதான் கொரோனா தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கியது. தற்போது கொரோனா விவகாரத்தில் திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள், ஒன்றிணைவோம் வா பிரச்சாரம், அறிக்கைகள், இணையதளங்களில் ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்வது என அனைத்துமே பிரசாந்த் கிஷோரின் திட்டப்படி நடப்பதாகவே சொல்லப்பட்டு வருகிறது. பிரசாந்த் கிஷோர் போட்டுக்கொடுத்த ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் தான் எம்எல்ஏ ஜெ அன்பழகனை கொரோனாவிற்கு பறிகொடுத்து விட்டோம் என்ற விரக்தி பிரசாந்த் கிஷோர் மீது திமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் அதிமுகவிற்கு தேர்தல் திட்டங்களை வகுத்துக் கொடுக்க களமிறங்கியுள்ளார் சுனில். அதேபோல கொரோனா விவகாரத்தில் அதிமுக எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சுனிலின் திட்டப்படியே அரங்கேற்றம் செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் பெல்லாரி பூர்வீகமாகக் கொண்டவர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சுனில். இவர் அமெரிக்காவில் உயர்கல்வி முடித்தவர் இந்தியா திரும்பிய அவர், அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய மோடிக்காக முக்கிய பணியாற்றியவர். 2016 ஆம் ஆண்டில் சுனில் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் மூலமாக தான் பாஜக தனிப்பெரும்பான்மை வாய்ந்த கட்சியாக வெற்றி பெற்றது எனவும் சொல்லப்படுவது உண்டு. 

அதேபாணியில் தான் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக விற்காக பிரச்சார வியூகங்களை சுனில் வகுத்துக் கொடுத்தார். நமக்கு நாமே என்கிற பிரச்சாரத்தை ஸ்டாலினுக்காக வகுத்துக் கொடுத்தவர், மு.க ஸ்டாலின் இமேஜ் இப்பொழுது இந்த அளவிற்கு மேம்பட்டிருக்கிறது அதற்கு சுனில் வகுத்துக் கொடுத்த திட்டங்களும் செயல்பாடுகளுமே காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஒரு சதவிகித வாக்குவிகித வித்தியாசத்தில்தான் அதிமுகவிடம் திமுக தோல்வியைத் தழுவியது. இருந்தாலும் திமுக நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றதற்கு காரணமே சுனில் வகுத்துக் கொடுத்த செயல்பாடுகள்தான் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு எனவும் அழைக்கப்படுகிறது. சுனில் வகுத்துக் கொடுத்த திட்டங்களின் மூலம் திமுக அபார வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குள் சென்றுவிட்டது. 

ஆனாலும் திமுக தலைமை பிரசாந்த் கிஷோர் வியூகங்கள் வகுத்து கொடுக்கும் கை பக்கம் திரும்பியதால், சுனில் திமுகவில் இருந்து விலகி விட்டு மீண்டும் பெங்களுருக்கு சென்றார். தேர்தல் உத்திகளை வகுப்பதில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாகவும் அவர் கூறினார் ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தரப்பு அரசின் கொள்கை மற்றும் பிரச்சார உத்திகளை வகுத்துக் கொடுக்க சுனிலை தற்போது மீண்டும் அழைத்து வந்து உள்ளது. திமுக வலுவாகவும் அதிமுக பலவீனமாகவும் உள்ளதாகவும் பொதுவான கருத்து சமூகத்தில் நிலவி வருகிறது ஆனால் வடநாட்டு அரசியலை மட்டுமே தெரிந்த பிரசாந்த் கிஷோர் வியூகம் வேறு.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த சுனிலுக்கு தமிழ்நாட்டு அரசியல் நன்றாகவே தெரியும் அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திமுகவிற்கு பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். திமுகவின் பலமும் பலவீனமும் அவருக்கு நன்றாக தெரியும். திமுகவை பற்றிய அத்தனை செய்திகளையும் துணியில் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பார் என்பதால் தனது வியூகங்களை மீண்டும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான அணி.

DMK, Prashanth Kishore, MK Stalin, AIADMK, Edappadi Palanisamy, Sunil, Election Planner, Tamil Nadu