நேருக்கு நேர் முதல் சூரரை போற்று வரை- நடிப்பின் நாயகன் சூர்யா

சூர்யா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு ட்விட்டரில் தங்களது அன்பினை வாழ்த்துகளாக தெரிவித்து வருகிறார்கள். இதனால் #NadippinNayagan, #HappyBirthdaySuriya ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் சூர்யா இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளதையும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சூர்யா. 

சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த சூர்யாவை பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா திரைப்படம் முற்றிலும் அவர் தோற்றத்தை மாற்றியது. 
சூர்யாவால் இப்படியும் நடிக்க முடியுமா என்று ரசிகர்கள் வியந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் அன்புச் செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மிரட்டினார்.கவுதம் மேனன், சூர்யா கூட்டணி மேஜிக் கூட்டணி ஆனது.

பேரழகன் திரைப்படத்தில் சின்னா கதாபாத்திரத்திற்கு உடலில் ஊனம் இருந்தாலும் அதன் நம்பிக்கை நம்மை எல்லாம் ஈர்த்தது. சின்னாவாக நம்மை சிரிக்க வைத்ததுடன், ஃபீல் பண்ணவும் வைத்தார் நடிகர் சூர்யா.

கஜினி திரைப்படம் மூலம் நடிப்பில் வேறு லெவலுக்கு சென்றார் சூர்யா. கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடித்த வாரணம் ஆயிரம் காதலர்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. அஞ்சல பாடல் இன்று வரை பிரேக்கப் சாங்காக இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது. 
ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்தார். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று சூர்யா பேசிய பன்ச் வசனம் இன்று வரை பிரபலம். சூர்யாவால் மட்டும் அல்ல சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் சிங்கம். 

சூர்யா மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ஏழாம் அறிவு படம் சூப்பர் ஹிட்டானது. கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது ஏழாம் அறிவு பற்றி தான் அனைவரும் பேசினார்கள். அதேபோலவே காப்பான் திரைப்படத்தின் வெட்டுக்கிளிகள் பிரச்னையும். 

காப்பானை அடுத்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக தான் அனைத்து ரசிகர்களும் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.

Suriya, Surya Birthday, Soorarai Pottru, Nerukku Ner, 7aam Arivu, Kaappaan, Jyothika