What's the reason behind the drop of 'Varma' ?

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த படம் ' வர்மா '. தெலுங்கில் மெகா ஹிட்டடித்த ' அர்ஜுன் ரெட்டி' யின் ரீமேக் ஆகும். இப்படம் கைவிடப்பட்டதாகவும், மறுபடியும் புதிதாக படம்பிடிக்க போவதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 என்டர்டையின்மென்ட் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையம் உண்டாக்கியுள்ளது.

இயக்குனர் பாலா, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். சமுதாயம் சார்ந்த மக்களின் வலி, வேதனைகளை இயல்பாக காட்சிப்படுத்தும் திறம் படைத்தவர். இவரது இயக்கத்தில் வந்த படங்கள் இதுவரை 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்பேர், 14 சர்வதேச விருதுகள் வென்றுள்ளன. இந்நிலையில் பாலா இயக்கத்தில் நிறைவடைந்த படமான ' வர்மா ' , ரிலீஸுக்கு தயாரான நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிக்கை பாலாவின் மீது வைக்கப்பட்ட கருப்பு புள்ளியாகவே கருதப்படுகிறது. பாலாவின் இயக்கம் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை என்றும், பாலாவிற்கும் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு என்றும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வந்த வண்ணம் உள்ளன.

இயக்குனர் பாலா என்றால் தமிழ் சினிமாவில் கண்டிப்பான இயக்குனர் என்று ஒரு பிம்பம் உண்டு. அவருடைய குணமே அவருடைய படங்களில் வரும் சில கதாபாத்திரங்களில் பிரதிபலிப்பு என்றும் கூறுவர். பாலா இயக்குனராக அறிமுகமான முதல் படம் ' சேது ' . இப்படத்தில் கதாநாயகனாக நடித்த விக்ரமிற்கு, நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகும் பாலா இயக்கத்தில் ' பிதாமகன் ' படத்தில் நடித்திருந்தார். இவ்விரண்டு படங்கள் விக்ரமை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. பாலாவின் மீது விக்ரமிற்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. இதன் விளைவாக தன் மகன் துருவ், பாலா இயக்கத்தில் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ரீமேக்கில் பெரிதும் ஆர்வமில்லாத பாலா, விக்ரம் கேட்டுக் கொண்டதன் காரணமாக ' வர்மா ' படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், தயாரிப்பாளர் ' படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை, துருவ்வை வைத்து புது படக்குழுவுடன் மீண்டும் தயாரிக்கவுள்ளோம் ' என்று அறிவித்திருந்தார். படத்தை முழுவதும் பார்த்த தயாரிப்பாளர் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளார். அர்ஜுன் ரெட்டிக்கும் வர்மாவிற்கும் எந்த சம்மந்தம் இல்லையாம். அந்த அளவிற்கு படத்தை எடுத்து வைத்துள்ளதாக பாலா மீது தயாரிப்பு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. பாலா, படத்தின் காட்சிகளை மாற்ற வேண்டாம் என்று கூறியும் தயாரிப்பாளர் அதற்கு தயாராகவில்லை என்று தெரிகிறது. இருவருக்கும் கருத்து உடன்பாடு ஏற்படாத நிலையில் பாலா படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் வேறு இயக்குனரை வைத்து படத்தை மறுபடியும் ஆரம்பிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான E4 என்டர்டையின்மென்ட் அறிவித்துள்ளது.

விக்ரமின் கனவும் பறிபோக, தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாலாவின் படத்தையே தயாரிப்பாளர் ஒதுக்கிய விவகாரம், பாலாவின் நட்சத்திர அந்தஸ்தின் மீது கறை படிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ரீமேக் படம் தனக்கு செட் ஆகாது என்று கூறியும் விக்ரமின் பெயரில் படத்தை இயக்க பாலா சம்மதித்தது குறிப்பிடத்தத்க்கது.  

Varma E4 Bala Dhruv Vikram Arjun reddy