ஹர்பஜன்சிங், லொஸ்லியா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரெண்ட்ஷிப். ஹர்பஜன்சிங் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம் இது. திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் எப்படி இருக்கு... வாங்க பார்க்கலாம்.
கதை:
ஹர்பஜன்சிங் இத்திரைப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் இளைஞராக வருகிறார். அவரது நண்பர்களாக சதீஷ் மற்றும் சக்திவேல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று உறுதியாக நின்று கல்லூரியில் சேர்கிறார் லொஸ்லியா. முதலில் லொஸ்லியாவிற்கும் வகுப்பில் படிக்கும் பிற மாணவர்களுக்கும் முட்டல் மோதலுமாக இருந்து ஒத்துவரவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்களுடைய பிரண்ட்ஷிப் வலுவடைகிறது. இந்த நிலையில் திடீரென ஒருநாள் லாஸ்லியா கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்படுகிறார்.
இதற்கு காரணம் எனக்கூறி ஹர்பஜன் சிங் மற்றும் அவரது நண்பர்களும் சிக்குகிறார்கள். இந்தப் பழியிலிருந்து அவர்கள் மீண்டார்களா, லொஸ்லியாவை கொலை செய்தது யார் என்ற விறுவிறுப்பான கதையுடன் நகர்கிறது ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம்.
பெர்பார்மன்ஸ்:
ஹர்பஜன் சிங்கிற்கு கதாநாயகனாக இது முதல் திரைப்படம் என்றாலும் தனது சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். லொஸ்லியா தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது. தனது குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜுன் வழக்கறிஞராக இத்திரைப்படத்தில் வருகிறார். வழக்கமான தனது அதிரடியான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். சதீஷின் காமெடி ஆங்காங்கே சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகிறது. சக்திவேல் முருகனின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும்.
படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து முழுமையாக சொல்லாமல் மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
பிளஸ்:
அர்ஜுன்,லாஸ்லியாவின் நடிப்பு
பின்னணி இசை
மைனஸ்: திரைக்கதையை மேலும் மெருகேற்றி இருக்கலாம்.
ஒரு வரி பஞ்ச்: பிரெண்ட்ஷிப்- கல்லூரி மாணவர்களுக்கு விருந்து