கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படம் இன்று (ஜூன் 18ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேங்ஸ்டர் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த திரை விமர்சனத்தில் பார்ப்போம்.
கதைச்சுருக்கம்
மதுரையில் தனது சகாக்களுடன் குட்டி குட்டி ரவுடிசம் செய்து வருபவர் வருபவராக தனுஷ் நடித்துள்ளார். இவர் லண்டனில் ஒரு காரியத்தை முடிப்பதற்காக அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு அந்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தாரா இல்லையா என்பதே கதை.
பர்பாமன்ஸ்
தனுஷ் தனது வழக்கமான பாணியை விட்டு சற்றே விலகி லண்டனில் ஒரு தமிழ் தாதாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கேம் ஆப் த்ரோன்ஸ் வாயிலாக உலக மக்களிடையே புகழ் பெற்ற ஜேம்ஸ் காஸ்மோ பக்காவான வில்லனாக தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்திருக்கிறார். இலங்கை தமிழ் பெண்ணாக வரும் இவருக்கு படத்தில் தனித்து தெரியும் படியான எந்தவிதமான காட்சிகளும் இல்லை. சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பின்னணி இசையும், ரகிட ரகிட பாடலும் ரசிக்கத்தக்க வகையில் உருவாகியுள்ளது. காட்சி அமைப்புகள், வசனங்கள், ஒளிப்பதிவில் கவனத்தை நன்கு செலுத்தியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்.
சிறப்பம்சங்கள்
தனுஷ்
பின்னணி இசை
பலவீனங்கள்
இரண்டாம் பகுதி
திரைக்கதை