படத்தலைப்பே வித்தியாசமாக இருக்கும் பிரபு சாலமனின் ‘காடன்’ திரைப்படம் எப்படி இருக்கு, விமர்சனத்தை பார்ப்போம்.
கதைச்சுருக்கம்
காடன் என்று அழைக்கப்படுகிற ராணா டகுபதி தனது மூதாதையர் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டைப் பாதுகாக்கவும் அங்கு வாழும் யானைக் கூட்டங்களை மனித வேட்டையிலிருந்து மீட்கவும் காட்டுவாசியாகவே வாழ்ந்து வருகிறார். வழக்கம்போல ஒரு அமைச்சரின் பேராசையில் காட்டின் ஒரு பகுதியை அழித்து ரிசார்ட் கட்ட முயல்கிறார்கள் கார்ப்பரேட்காரர்கள். இந்த ஆக்கிரமிப்பால் யானைகளின் வழித்தடம் அழிக்கப்பட்டு அவை தண்ணீர் குடிக்கக்கூட வழியின்றி தவிக்கின்றன. இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர ஆதிவாசிகளுடன் இணைந்து போராடும் ஹீரோ க்ளைமேக்ஸில் எப்படி வென்றார் என்பதுதான் கதை.
பர்ஃபாமென்ஸ்
பிரம்மாண்டமான காடு, அதனுள் மிக தத்ரூபமாக எடுக்கப்பட்ட யானை மற்றும் பறவைக் காட்சிகள் நம்மை ஒரு அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய் அமரவைத்த உணர்வை மிக எதார்த்தமாய் நமக்கு அளித்த பிரபு சாலமன் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்தான். அவரைவிடவும் அதிக கவனம் பெறுபவர் கண்கொள்ளாக்காட்சிகளை அதன் மணம் மாறாமல் நமக்குக் கொடுத்த அறிமுக ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார்தான்.
பிதாமகன் பட விக்ரம் ஸ்டைலில் மீண்டும் ரசிக்கிற மாதிரி ஒரு தோற்றத்தில் ராணா படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னொரு ஹீரோவாக வரும் விஷ்ணு விஷால் முதல் பாதியில் ஒரு கும்கி யானையுடன் வந்து ஒரு தீவிரவாதிப்பெண்ணைக் காதலித்து அப்புறம் சொல்லாமல் கொள்ளாமல் கதையிலிருந்து காணாமல் போகிறார். நிருபராக வரும் இன்னொரு கதாநாயகி ராணாவுடன் காட்டுக்குள் அவ்வப்போது கேமராவுடன் வந்து ‘அய்யகோ காடு அழிகிறதே என்று ஃபுல் மேக்கப்பில் கவலைப்படுவதோடு சரி.
படத்தின் இரண்டு ஹீரோயின்களான ஸோயா ஹுஸைன்,ஷ்ரியா பில்கோயின்கர் தொடங்கி நூற்றுக்கணக்கான வட இந்தியர்களின் பெயர்கள் இருப்பதாலோ என்னவோ ஒரு இந்தி டப்பிங் படம் பார்க்கிற உணர்வை தவிர்க்க முடியவில்லை.
சிறப்பம்சங்கள்
ஒளிப்பதிவு
ராணா
பலவீனங்கள்
திரைக்கதை
இரண்டாம் பாதி