பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம்தான் கர்ணன். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
கதைச்சுருக்கம்:
கொடியன்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பயணிக்க பேருந்து வசதிகளோ பேருந்து நிறுத்தமோ அமைத்து தரப்படவில்லை அதற்காக அந்த கிராமத்து மக்கள் பல்வேறு விதங்களிலும் போராடி வருகின்றனர். இருப்பினும் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் திடீரென அந்த கிராமத்து மக்கள் ஒரு முடிவினை எடுக்கிறார்கள். அந்த முடிவு அந்த கிராம மக்களுக்கு நன்மையில் முடிந்ததா அல்லது சிக்கலில் தள்ளியதா என்பது குறித்த திரைப்படம் தான் கர்ணன்.
நடிகர் தனுஷ் வழக்கம் போல தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நடிகர் லால் தனுஷுக்கு தாத்தா கதாபாத்திரம் இருந்தாலும் ஒரு நண்பன் போலவே அவருடன் படம் முழுக்க பயணிக்கிறார். அவருக்கு இத்திரைப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் எதுவும் கொடுக்கப்படவில்லை. தமிழில் நாயகியாக அறிமுகமாகும் ரஜிஷா விஜயன் சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் திரைப்படத்தில் அளிக்கப்படவில்லை.
பலம்:
தனுஷின் நடிப்பு
பின்னணி இசை
கதைக்களம்
பலவீனங்கள்:
படத்தின் நீளம்
ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு
ஒரு வரி பஞ்ச்: கர்ணன்- பலம் மற்றும் வலிமை பொருந்திய தனுஷ்