ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை வருவது வழக்கமானது. அமாவாசை திதியில் நம் முன்னோர்களை நினைத்து விரதமிருந்து வழிபடுவதும், தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை வந்தாலும், மூன்று முக்கிய அமாவாசை தினங்களிலாவது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம்.
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இவர்கள் கண்டிப்பாக விரதமிருந்து முன்னோர்களுக்கும், இறந்த சொந்தங்களுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால், குடும்ப விருத்தி, குடும்பத்தில் மகிழ்ச்சி, வெற்றி ஏற்படும்.
ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்களாக இருக்கும் நம் முன்னோர்கள், பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்குப் புறப்படுவதாகக் கருதப்படுகிறது.
மகாளய அமாவாசை தொடக்கத்தின் போது பிதுர்கள் பூலோகத்தை வந்து அடைவதாகவும், தன் சந்ததியினரை ஆசி வழங்குவதாக கூறப்படுகிறது.
மகாளயபட்ச எனும் 15 நாட்களில் ஏதேனும் ஒரு நாளிலாவது அமாவாசை விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தை அமாவாசை தினத்தில் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது.
அந்த வகையில் இவ்வருடம் ஆடி மாதம் வரும் ஞாயிறு 2022 ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது.
ஜூலை 28ம் தேதி அதாவது ஆடி மாதம் 12ம் தேதி அமாவாசை வருகின்றது.
ஆடி மாதத்தில் அமாவாசை திதி ஜூலை 27ம் தேதி இரவு 10.06 மணிக்கு தொடங்குகிறது. அதானல் ஆடி அமாவாசை தர்ப்பணம் ஜூலை 28ம் தேதி வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க சரியான நேரமாக குறித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.