85 போட்டிகளுக்கு 1100 கோடி- விளையாட்டு வீரர்களில் கலக்கும் நோவக் ஜோகோவிச்

நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அவர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று ஃபெடெரர் மற்றும் ரஃபேல் நடாலின் சாதனைகளை சமன் செய்துள்ளார்.
மேலும் 85 போட்டிகளில் பட்டம் வென்றுள்ளதன் மூலம், 150 மில்லியன் டாலர் அதாவது ரூ. 1100 கோடிக்கும் அதிகமான பரிசுத்தொகையை ஈட்டிய முதல் டென்னிஸ் வீரர் என்கிற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ஃபெடரர் - 130 மில்லியன் டாலரும், நடால் - 124 மில்லியன் டாலரும் பரிசுத் தொகையாக பெற்றுள்ளனர்.