ஒரே மாதத்தில் 3.40 கோடி... பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக கடந்த 1 மாதத்தில் மட்டும் மூன்று கோடியே நாற்பது லட்சத்து 41 ஆயிரத்து 565 ரூபாய் கிடைத்துள்ளது.

பழனி முருகன் கோவிலுக்குக் கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகைதந்தனர். இந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலை மீதுள்ள கார்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து இரண்டு நாட்களாக எண்ணும் பணி நடைபெற்றது.

அதன்படி, உண்டியலில் காணிக்கை வரவாக ரொக்கம் – மூன்று கோடியே நாற்பது லட்சத்து 41 ஆயிரத்து 565 ரூபாய் ( 3,40,41,565) கிடைத்துள்ளது.
மேலும், தங்கம் 1,644 கிராம், வெள்ளி 22,817 கிராம் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 393 கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.