6 வீரர்கள் பூஜ்ஜியம்; புதிய மோசமான சாதனை படைத்த வங்கதேசம்: 103 ரன்களுக்கு ஆல் அவுட்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஜூன் 16ம் தேதி மே.இ.தீவுகலின் நார்த் சவுண்ட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியது, இதில் வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் வங்கதேச அணியில் மொத்தம் 6 வீரர்கள் பூஜ்ஜிய ரன்கள் எடுத்துள்ளனர்.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிராத்வெய்ட் 42, நிக்ருமா போனர் 12 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது, தமீம் இக்பால் 29, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 51, இவர்கள் இருவருமே 80 ரன்களைச் சேர்க்க 103 ரன்களில் மற்ற 8 வீரர்கள் 23 ரன்களையே எடுத்தனர். இதுவரை 7 முறை ஒரு இன்னிங்சில் 6 பேட் டக் அவுட் ஆகியுள்ளனர், இதில் வங்கதேசம் இம்மாதிரி அவுட் ஆவது 3வது முறையாகும். கடந்த மாதம் இலங்கைக்கு எதிராகவும் இப்படித்தான் வங்கதேசம் 6 டக்குகள் கொண்ட மோசமான இன்னிங்சை எதிர்கொண்டது.

நேற்று நார்த் சவுண்டில் மொத்த இன்னிங்ஸுமே 32.5 ஓவர்களில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் 33 ரன்களுக்கு ஆல் அவுட். அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டுகள். இந்த சரிவை தொடங்கியது கிமார் ரோச், இவர் 2/21 என்று தொடக்கத்தில் சரிவை ஏற்படுத்தினார். கைல் மேயர்ஸ் 10 ரன்களுக்கு 2 விக்கெட்.

டக் அவுட்களை தொடங்கி வைத்தவர் கிமார் ரோச், இவர் மஹ்முதுல் ஹசன் ஜாய் விக்கெட்டை வீழ்த்தினார் பிறகு ஷாண்டோவை பவுல்டு செய்தார். இருவரும் டக். மோமினுல் ஹக்கை 0-ல் வீழ்த்தினார் சீல்ஸ். தமிம் 29 ரன்களில் அவுட் ஆன போது வங்கதேசம் 41/4 என களத்தில் இருந்தது. ஷாகிப் அல் ஹசன் 64பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இவர் ஆட்டமிழந்தவுடன் லஞ்ச் முடிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னிங்ஸ் முடிந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் கேம்பெல் 24 ரன்கள் எடுத்து முஸ்தபிசுர் ரஹ்மானிடம் பவுல்டு ஆனார். ரேமன் ரீய்பர் 11 ரன்களில் எபதத் ஹுசைனிடம் அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் 95/2 ரன்களுடன் களத்தில் உள்ளது.