தோழியை மணக்க ஆணாக மாறிய இளம்பெண் தொடர்ந்த வழக்கு... மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஆணாக மாறி தோழியை மணந்த இளம்பெண் தொடர்ந்த வழக்கில், விட்டுச் சென்ற முன்னாள் காதலி தன் சொந்த விருப்பப்படி வாழ அனுமதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த மனுவில், ஓரினச்சேர்க்கை, பாலினம் மாறியவர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ளேன். கடந்த ஒரு வருடமாக நானும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த 7-ந்தேதி என் காதலியை திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் அமைதியான முறையில் குடும்பம் நடத்தினோம்.

இந்தநிலையில் என் மனைவியின் குடும்பத்தினர் திடீரென எங்கள் வீட்டிற்குள் நுழைந்து என்னை தாக்கினர். பின்னர் என் மனைவியை கடத்திச் சென்றுவிட்டனர். அவரை மீட்டுத் தரக்கோரி போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையே என் மனைவியின் உறவினர்கள், ஓரினஈர்ப்பு உறவை விட்டுவிடுமாறு வலியுறுத்தி, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று தகாத மருத்துவ சிகிச்சையும் அளித்ததாக தெரிகிறது. விருப்பத்திற்கு மாறாக அவரை அடைத்து வைத்துள்ளனர். இதுசம்பந்தமாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. என் மனைவியின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. என் மனைவியை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் தோழி 21 வயது நிரம்பியவர். எனவே அவரது சொந்த விருப்பப்படி வாழ்வதற்கான முடிவு எடுக்க அனுமதிக்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்து, வழக்கை முடித்துவைத்தனர்.