திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியானது கடந்த 24 ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் 31 ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.
10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடைபெறுகின்றன.
இப்போட்டியில் கலந்துகொள்ள நடிகர் அஜித் இன்று காலை திருச்சி வந்தார். அவர் இன்று முழுவதும் நடைபெறும் 4 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் இன்று காலை முதல் போட்டியாக சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டார்.
அஜித்குமார் திருச்சி வந்து இருப்பது அவர் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை காண்பதற்க்காக ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். அவர் இறங்கியதும் அங்கு இருந்த செய்தியாளர்களை பார்த்து சின்ன புன்னகையுடன் வணக்கம் சொல்லி, போட்டோவுக்கு போஸ் கொடுத்து அமைதியாக சென்றார்.